எட்டு வயதில் எழுதிய முதல் கவிதைக்கும், இருபது ஆண்டுகளுக்கு பின் இன்று எழுதும் கவிதைக்கும் எத்தனையோ வேறுபாடுகள் உண்டுதான். ஆனாலும் என் எண்ணங்களில் மழலைச்சாறு குறையவில்லை. மனதின் மேற்பரப்பில் ஆயிரம் தத்துவங்கள் அரங்கேறினாலும் அடிவாரத்தில் இன்றும் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டுதானிருக்கிறது. இந்த மென்மையும் உண்மையும் மாறாமல் என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் நண்பர் விக்ரம். அவரே ஒரு சிறந்த கவிஞர் என்பதால் உணர்வுகள் சிதையாமல் கவிதைகள் மொழிபெயர்கின்றன. என் இதயமொழிக்கு இவர் தரும் புதியமொழிக்கு நன்றி.
அன்புடன்
கபிலன்வைரமுத்து
